Sunday, September 21, 2008

456. இந்த முறை ஏன் விஜயகாந்தாக இருக்கக் கூடாது? - கி.அ.அ.அனானி

முன்னுரை: ரொம்ப ரொம்ப நாட்களுக்குப் பிறகு கி.அ.அ.அனானியிடமிருந்து ஒரு மேட்டர் மெயிலில் வந்தது. வந்து ஒரு வாரம் ஆகியும், அதை வாசித்து விட்டு இன்று தான் பதிகிறேன் ! கி.அ.அ.அ தாமதத்திற்கு கடுப்பாக மாட்டார் என்று நினைக்கிறேன். கடந்த வாரம் முழுதும் ஆபிஸில் ஒரே ரென்ஷன் !!! இன்னும் சில மேட்டர்களும் அவர் அனுப்பியிருக்கிறார். வாசித்து சென்சார் செய்த பின், அவையும் பிரசுரிக்கப்படும் :) எப்போதும் போல், பின்னூட்டங்களுக்கு அவரே பதில் தருவார், அதாவது கி.அ.அ.அ will stand and play :) கி.அ.அ.அ மேட்டர் கீழே:
**************************************************

ஆயிற்று ...அனேகமாக இந்த வருட கடைசியில் பாராளுமன்றத் தேர்தல் வந்தே விடும் என்று எல்லா தரப்பிலும் பேசத் துவங்கி விட்டனர். கட்சிகள்அதற்கான கூட்டணிகளிலும்,தேர்தல் வியூகங்களிலுமிறங்கத் தயாராகி விட்டனர்.தமிழகத்திலும் சில விலகல்களும் ஈர்த்தல்களும் சேர்த்தல்களும் ,அறிவிப்புகளும் நடக்கத் தொடங்கி விட்டன.கருணாநிதியும் நாளொரு இலவசம், பொழுதொரு திட்டம் எனத் தயாராகி விட்டார். ஜெ தரப்பில் சுறு சுறுப்பாக அறிக்கைகளும், காஸ் விலை முதல் கக்கூஸ் அடைத்துக் கொண்டது வரையிலான அனைத்து விஷயங்களுக்கும் மறியல் போராட்டங்கள் என போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது..நிரந்தர எதிரியும் கிடையாது என்பது எழுதப்படாத விதியாக இருந்தாலும் கூட ஓட்டு அரசியலுக்கு ஏற்றவாறு அமையும் சில கூட்டணி முடிவுகளை ஒரு தேர்தல் வரையாவது அனுமானிக்க முடியும்.

உதாரணமாக வரும் தேர்தலில் பமக திமுக உறவு என்பது நடவாத ஒரு விஷயம் .

அதே போல திமுகவும் காங்கிரஸுடனான தங்களது உறவுக்காக ( தமிழகத்தில் மீதமுள்ள மூன்றாண்டு ஆட்சிக் காலத்தையும் கணக்கில் கொண்டே கூட்டணியை நீட்டிக்க தி மு க ஆவல் கொண்டுள்ளது) கம்யூனிஸ்டுகளை உதறத் தயாராகி விட்டனர்.

கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த வரை இந்தத் தேர்தலில் அவர்களுக்கு பெரியதாக எந்த சாய்ஸும் இல்லை. பாஜக இல்லாத அதிமுக கூட்டணி அல்லது ஒரு மூன்றாவது கூட்டணி என்பதில் இரண்டில் ஒன்றுதான் இவர்களது முடிவாக இருக்கமுடியும்( தனித்துப் போட்டி என்ற தற்கொலை முயற்சியை தவிர்த்து)

அதிமுகவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளா / பாஜகவா என்று வரும் போது அவர்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் தேர்ந்தெடுப்பர்.அதில்தான் அவர்களுக்கு ஆதாயம்.கம்யூனிஸ்டுகளுக்கு தொழிற்சங்கங்களில் உள்ள செல்வாக்கு மற்றும் உறுப்பினர் பலம் இரண்டும் பஜகவிற்கு தமிழகத்தில் கிடைக்கும் ஓட்டுக்களை விட அதிகம் என்பது கண்கூடு.அதுவும் தவிர தேர்தலுக்கு பின் ஒரு வேளை பஜக அரசு அமையும் பட்சத்தில் ஜெயலலிதா எந்த குற்ற உணற்வோ அல்லது கூச்சமோ இல்லாமல் கம்யூனிஸ்டுகளை கை கழுவி விட்டு பா ஜ க அரசில் ஐக்கியமாகி விடும் சந்தர்ப்பம் மிக அதிகம் ( இதற்குத் தேவை சில எம் பிக்கள் மட்டுமே) ஆட்சியமைக்க எண்ணிக்கை குறையும் பட்சத்தில் பாஜகவும் இவர்களை இரு கரம் கூப்பி வரவேற்பார்கள் என்பதும் திண்ணம்.

மற்ற கட்சிகளைக் கணக்கில் கொண்டால் வைகோ அனேகமாக இந்த பாராளுமன்றத் தேர்தல் வரை அதிமுகா கூட்டணியில்தான் இருப்பார்( இதற்கு இன்னும் ஒரு முக்கிய காரணம் செஞ்சி ராமசந்திரன் குழுவை தி மு க ஆதரித்து மதிமுகவை உடைக்க முயன்றது..அதனால் அதிமுகவுடன் சீட் பேரம் படியாவிட்டாலும் கூட இந்தத் தேர்தல் முடியும் வரையிலாவது வைகோ கலைஞர் தோளில் சாய்ந்து பழங்கதை பேசி கண்ணீர் விடும் நாடகம் அரங்கேர வாய்ப்பில்லை.)

பமகவைப் பொறுத்த மட்டில் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற தற்கொலை முடிவைத் தவிர அவர்களிடம் உள்ள ஒரே சாய்ஸ் அதிமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதுதான்.(ஏனெனில் விஜயகாந்துடன் இணைந்தால் கூட்டணியில் யார் பெரியண்ணன் என்று ஏற்படும் முரண்பாட்டை அவர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள்...அடுத்த தேர்தல் வரையிலாவது)இதனாலேயே அதிமுகவை நோக்கிய தங்களது காய் நகர்த்தலை தொடங்கி விட்டனர்.

இப்படிப்பட்ட சூழலில் எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவது என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

கருணாநிதி போன தேர்தலில் இரண்டு ரூபாய் அரிசியும் இலவச கலர் டி வி யும் , ஒட்டுப் போட்ட துணிபோல கொள்கையில்லாத கூட்டணியும் ஆட்சியைப் பெற்றுத்தந்தது போலவே இந்த முறையும் செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் அறிவிப்புகளையும் ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி,50 ரூபாய்க்கு 10 மளிகை சாமான் என்பது போல பம்மாத்துத் திட்டங்களை அள்ளி விடத் தொடங்கி விட்டார்..தனது /காங்கிரஸ் ஆட்சியின் தோல்விகளும் ,வாரிசு அரசியலால் ஏற்பட்டுள்ள கெட்ட பெயராலும், கூட்டணியின் விரிசல்களாலும் ஆட்சியின் அடித்தளம் ஆடிப் போயிருப்பதை அவர் உணர்ந்தே இருக்கிறார்.

காங்கிரசையும் ஆட்சியையும் தக்க வைத்துக் கொள்ள மாநிலத்திலும் கூட்டணி ஆட்சியையும் அறிவித்து விடுவார் போலத்தான் தெரிகிறது.அதில் கோஷ்டி சண்டையும் பூசலும் குழப்பமும் அன்றி வேரெதுவும் மிஞ்சப் போவதில்லை.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் ஒரு சேர அதிகார பலம் மிக்க பதவிகள் கிடைத்தும் மக்களுக்காக ஒன்றும் கிழிக்காதவர்கள், உருப்படியாக எந்த ஒரு மக்கள் நல தொலை யோக்கு திட்டத்தையும் நிறைவேற்ற லாயக்கற்றவர்கள் அடுத்த முரை வெற்றி பெற்றால் என்ன சாதித்து விடப் போகிறார்கள். அதிலும் மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஒரு இடத்தில் இவர்களது ஆட்சியும் மற்ற இடத்தில் எதிர் அணி ஆட்சியோ இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். இவர்களுக்கு ஓட்டுப் போடுவது பாலுக்காக மலட்டு மாட்டை வாங்குவது போன்றது.

ஜெயலலிதாவைப் பொருத்த வரை அவருக்கு ரெட்டிப்பு சந்தோஷம்.ஏதோ பிக்ஸட் டெபாஸிட்டில் போட்டிருந்த பணம் 5 வருடம் கழித்து மெச்சூராகி கைக்கு வருவது போல் அடுத்து எனதாட்சிதான் என்று சொல்லிக் கொண்டு அலைகிறார்...போன முறை ஆட்சியில் இருந்த போது நான் என்ன சாதித்தேன்..இப்போது எதிர்க்கட்சியாக என்ன கிழித்தேன் என்பதெல்லாம் இவருக்கு ஒரு பொருட்டே இல்லை. கருணாநிதியின் மாற்று நான் மட்டுமே என்பதாக மமதையில் அலைகிறார்.இதனால் இவருக்கு ஓட்டுப் போட்டால் என்ன மாதிரியான விஷயங்கள் நடந்தேரும் என்பது கிட்டத்தட்ட உணரமுடிகிறது. இவர்களுக்கு ஓட்டுப் போடுவதென்பது கிட்டத்தட்ட உயிர் போகும் என்று தெரிந்தே கழுத்தை அறுத்துக் கொள்வதற்கு ஒப்பாகும்.

இதற்கு ஒரே மாற்று தமிழகத்தில் ஒரு மூன்றாவது அணி உருவாவதே ஆகும்.அந்த மூன்றாவது அணியை உருவாக்கக் கூடிய ஒரே நம்பிக்கை இந்தத் தேர்தலைப் பொறுத்த மட்டிலும் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்த் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பா.ம.க ஆகியோரை ஒருங்கிணைத்து தேர்தல் களத்தில் மூன்றாவது அணியாக களம் இறங்குவது என்பது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு ஆட்சியை தரவல்ல சூழலை ஏற்படுத்துவதோடு, கேப்டனின் முதலமைச்சர் கனவுக்கும் அது ஏற்றமாதிரி அமையும்.

விஜகாந்திடம் கொள்கை இருக்கிறதா?அனுபவம் இருக்கிறதா? நடிகர் அப்படி இப்படி என்று ஏகப்பட்ட கேள்விகளையும் ஆட்சேபணைகளையும் வீசலாம்.ஆனால் அதையெல்லாம் கடந்து இந்த அதிமுக, திமுக என்ற இரு நோய்களையும் கட்டுப் படுத்தக் கூடிய ஒரு இடைக்கால நிவாரணி என்ற அளவிலாவது அவருக்கு ஒரு சந்தர்பம் தருவதில் எந்தத் தவறும் இல்லை.விஜயகாந்த் தவறுகள் செய்திருக்கலாம்.ஆட்சி அனுபவமோ அல்லது அரசியல் தந்திரமோ,புள்ளி விவரங்களோ ,பேச்சு வன்மையோ பெற்றவராக இல்லாதிருக்கலாம்.ஆனால் இது வரை ஆட்சியில் இருந்த யாரும் புனிதருமல்ல,பிறவி மேதைகளாக வானத்திலிருந்து குதிக்கவும் இல்லை.அதனால் விஜயகாந்தும் வெற்றி பெற்று பின் அரசியல் அனுபவம் பெறுவதனால் எந்த குடியும் முழுகி விடப் போவதுமில்லை.

அவரது நிறைகள் என்று பார்த்தோமானால்

ரஜினிகாந்த் மாதிரி இத்தனை ரசிகர் பலம் இருந்தும் , ஜெயிப்போம் என்ற நிலைமை இருந்தும் அரசியலில் இறங்கலாமா வேண்டாமா என யோசித்துக் கொண்டு வெறும் "வாய்ஸ்" மட்டும் கொடுத்துக் கொண்டிருக்காமல் துணிந்து இறங்கியது.

ஏதாவது ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு பதவிகளும் மற்ற பிறவற்றையும் அனுபவிக்கும் நிலை இருந்தும், சரியோ தவறோ தனிக் கட்சி ஆரம்பித்து நடத்துவது

அப்படி ஆரம்பித்த கட்சியை வெற்றிகரமாக 4 ஆண்டுகளாக நடத்துவது

எந்தக் கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று சொன்னதுமில்லாமல் இரண்டு தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டுக் காட்டியது

இன்ரைய காலகட்டத்தில் கருணாநிதி, ஜெயலலித என்ற இருவரையும் ஒரே நேரத்தில் எதிர்க்கும் ஓரளவு பெயரெடுத்த ஒரே கட்சி விஜயகாந்தின் கட்சி மட்டுமே


ராமேஸ்வரம் மீனவர் பிரச்சனை போன்ற சில விஷயங்களுக்காக் இவர் நடத்திய போராட்டங்கள் அரசையே சற்றே நிமிர்ந்து பார்க்கச் செய்துள்ளதென்பதும் உண்மை

அதனால் தான் சொல்கிறேன்..இந்த முறை ஏன் விஜயகாந்தாக இருக்கக் கூடாது ???

16 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test!

புருனோ Bruno said...

//அவரது நிறைகள் என்று பார்த்தோமானால்//

சரி சாமி

குறைகளை விட்டுவிட்டீர்களே

1. சரியான கொள்கைகளை அறிவிக்காதது.

2. நடைமுறைக்கு சாத்தியமில்லாத திட்டங்கள்

3. மற்ற தலைவர்கள் ஆட்சிக்கு வந்த பின் முன்னுக்கு வரும் குடும்பம், இப்பொழுதே இவரை சுற்றி இருப்பது

4. மற்ற கட்சிகளை விட லஞ்சம் அதிகம் புழங்குவதாக புகார் வந்தது (பொறுப்பை பெற நான் இவ்வளவு தந்தேன்)

5. சாதி (அல்லது மொழி) வட்டத்திற்கும் சிக்கியது

குறைகள் நிறைகளை விட அதிகம் இருக்கிறது.

ரவி said...

பண்ரூட்டியார் மாதிரி மொக்கை அரசியல்வியாதிகளை ஏன் சேர்க்கனும் ?

இவ்ளோ அமவுண்டு கொடுத்தா ஒன்றியம், இவ்ளோ அமவுண்டு கொடுத்தா மாவட்டம், இவ்ளோ அமவுண்டு கொடுத்தா கிளை என்று பதவிகள் அவுட் ரைட் பர்ச்சேசுக்கு தே.மு.தி.கவில் கிடைப்பது கி.கி.கி.அ.ஆ.இ.இ. அனானிக்கு தெரியுமா ??

ஆயில்யன் said...

நேர்மையான நிர்வாகம் பெரிய குறிக்கோளாக இருந்தாலும், அவருக்கே உரித்தான தலைமை பண்பில் சிறந்து விளங்கினாலும்,அதிகாரமே கையில் வந்து சேர்ந்தாலும் கூட திறமையானதொரு நிர்வாகத்தினை தன் கட்சி நிர்வாகத்தினை கொண்டு அனைத்து மட்டங்களுக்கும் கொண்டு செல்வது சிரமமான விசயம்தான்!

இன்னும் கொஞ்சம் வருடங்கள் அனுபவப்பட்டு அப்புறமா ஆசைப்படலாம்!

RATHNESH said...

பாலா சார்,

திமுக-வின் ஆரம்ப கால வளர்ச்சிக் கட்டங்களுடன் விஜய்காந்த்தின் அரசியலை ஒப்பிட்டு ஒரு பதிவு எழுத இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் விஷயங்களை ஆதாரபூர்வப் படுத்திக் கொண்டிருப்பதில் தாமதம்.

விஜய்காந்த் இப்படியே தொடர்ந்தார் என்றால் அவருக்கு இந்த முறை அல்ல; அடுத்தமுறைக்கான வாய்ப்புகள் அதிகம். (அதுவரையும் தொடர வேண்டும்.)

டாக்டர் சார், நீங்கள் சொல்லும் குறைகள் தான் அவருடைய அரசியல் அடித்தளத்தை பலமாக்கி வருகின்றன.

காங்கிரஸ் சோனியாவின் கட்டுப்பாட்டிலும், கருணாநிதி இருக்கின்ற வரையிலும் அவர்களுக்கிடையேயான உறவு முறிவுக்கு வாய்ப்புகள் கம்மி. இந்த முறை தமிழக காங்கிரஸ் தங்கபாலு தலைமையில் உள் அரசியல் விளையாடி அம்மாவுக்கு சாதகமாகத் தான் நடக்கும்.

இந்த முறை அம்மாவுக்கே வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

said...

எ அ பாலா சார்

பதிவை பதிப்பித்தமைக்கு நன்றி . முடிவில் by கி அ அனானி என்று குறிப்பிடுவீர்களே அது மிஸ்ஸிங்.

பின்னூட்டங்கள் வாயிலாக வரும் கருத்துக்களுக்கு பதில் கொஞ்சம் தாமதமாகலாம்..வேலைப் பளு காரணமாக.

செந்தழல் ரவிக்கு என் மேல் என்ன கோபம்? "கி.கி.கி.அ.ஆ.இ.இ. அனானிக்கு " என்று விளிக்கும்/ எழுதும் படியாக? :( அவரிடமிருந்து இதற்கான ஞாயமான பதிலை எதிர் பார்க்கிறேன்??????

கி அ அ அனானி

ஜோ/Joe said...

ஓகோ..முன்னால ரஜினிகாந்த் மூலமா முயற்சி பண்ணி ,அது படுதோல்வி என்றதும் ,இப்போ விஜய காந்தா ? நடக்கட்டும்..நடக்கட்டும் .

said...

என்ன திடீர்னு விஜயகாந்த் மேல கரிசனம்?
அது வேற ஒண்ணும் இல்ல, அவரு பதவிக்கு வந்தாலும் அவரை ஈஸியா ஹேண்டில் பண்ணிராலாமுண்ணு நெனைக்கிறாங்க. பிரேமலதா சின்னம்மாவுக்கு கொஞ்சமும் சளைச்சவங்க இல்லை அப்படீங்கறதை மறக்க வேண்டாம்.

said...

டாக்டர் புருனோ

குறைகளை விடவில்லை. குறைகளில்லாத கட்சியுமில்லை. மாற்றாக ஏன் வரக்கூடாது என கேட்டுள்ளேன் அவ்வளவே. போகப் போக அவர் குறைகளை நிவர்த்தி செய்கிறாரா அல்லது மற்ற கட்சிகள் செய்யும் தவறுகளையே செய்கிறாரா என சந்தர்ப்பம் அளித்துப் பார்த்தால் தெரிந்து விடும்.

//டாக்டர் சார், நீங்கள் சொல்லும் குறைகள் தான் அவருடைய அரசியல் அடித்தளத்தை பலமாக்கி வருகின்றன// என்று சொல்லும் ரத்னேஷ் அவர்களது பின்னூட்டத்தைப் பாருங்கள் :)

கி அ அ அனானி

said...

ஆயில்யன்

அவருக்கு இன்னும் அனுபவம்,நிதானம் , பக்குவம் கண்டிப்பாக தேவைதான். அது வரை நாம் இருப்பதை வைத்துத்தான் சமாளிக்க வேண்டுமா என்ன? யார் வந்தாலும் நிலைமை (அதிமுக /திமுக) ஆட்சிகளை விட மோசமாக போய் விடாது என்பது என் எண்ணம்.காத்துருப்பதை விட இப்போதே முயன்று பார்த்து விடலாமே ?
கி அ அ அனானி

said...

ரத்னேஷ்

//இந்த முறை அம்மாவுக்கே வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது///

இந்த நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவலைதான் இந்த பதிவே.:)

கி.அ.அ.அனானி

said...

ஜோ

இது என்னிக் குறிப்பிட்டா இல்லை பாலாஜி சாரையா?

என்னையென்றால் " நான் கிங் மேக்கரெல்லாம் கிடையாது :)"

"ரஜினி ரசிகனும் கிடையாது:) "

கி.அ.அ.அனானி

said...

அனானி
//என்ன திடீர்னு விஜயகாந்த் மேல கரிசனம்?///

நெலமை அப்படி :)

///அது வேற ஒண்ணும் இல்ல, அவரு பதவிக்கு வந்தாலும் அவரை ஈஸியா ஹேண்டில் பண்ணிராலாமுண்ணு நெனைக்கிறாங்க.//
யார் ? அவர் நாட்டை இப்போதிருப்பவர்களைக் காட்டிலும் சரியா ஹேண்டில் பண்ணுவாரா என்பதுதான் கேள்வி.

///பிரேமலதா சின்னம்மாவுக்கு கொஞ்சமும் சளைச்சவங்க இல்லை அப்படீங்கறதை மறக்க வேண்டாம்.///

பாத்துருவோமே அதையும் :)

கி அ அ அனானி

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நண்பரே,
என்னுடைய இந்தப் பதிவைப் பார்க்கவும்

said...

லயோலா கல்லூரி ஊடகவியல் நடத்திய கருத்துக்கணிப்பில் வெளியாகியுள்ள ஒரு கணிப்பு :)

///தேமுதிக பலமடைகிறது:

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என 43.4 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஓரிரு இடங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தும் என 32.8 சதவீதம் பேரும், தாக்கமே இருக்காது என 23.8 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.////


கி அ அ அனானி

குடுகுடுப்பை said...

அப்போ நான் என்ன பண்றது, இதெல்லாம் சரிப்பட்டு வராது

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails